search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அண்ணாதுரை"

    தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அமைந்துள்ள பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த கருத்துகளை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு கலெக்டர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    கதிராமங்கலம் ஊராட்சியில் புதியதாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கும்பகோணம்:

    கதிராமங்கலம் ஊராட்சி ஒட்டைக்காரத் தெருவில் புதியதாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ள இடத்தினை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மேல்நிலைப்பள்ளி தற்காலிகமாக சின்னக்கடை தெருவில் செயல்பட ஏதுவாக தற்காலிக வகுப்பறைகளை பார்வையிட்டு பிரதான சாலையிலிருந்து பள்ளி வரை தெரு விளக்கு அமைக்கவும், சாலை வசதி ஏற்படுத்தவும், கட்டிடத்தில் பழுதடைந்த இடங்களை விரைந்து சீரமைக்கவும், தற்காலிக கழிவறை அமைக்கவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலக பின்புறம் உள்ள கட்டிடத்தில் தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகைப் பதிவேட்டினை பார்வையிட்டு மருந்து கையிருப்பினை கேட்டறிந்தார். அருகே உள்ள குளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கவும், தெருவிளக்குகளை புதுப்பிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது சப்-கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வீரமணி, உதவி பொறியாளர் ஜவஹர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×